இலங்கை

நள்ளிரவில் சம்பவித்த விபத்தில் இருவர் பலி!

ரம்புக்கன – ஹதரலியத்த வீதியின் லினியா ஹெல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிக பாரத்தை ஏற்றிச் சென்ற லொறி, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லொறி மற்றும் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…