உலகம்

மோடி, ட்ரம்புக்கு வழங்கிய பதில்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 25 வீத இறக்குமதி வரி அறிவிப்பு தொடர்பில் இந்தியா தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.

இதன்படி தேசிய நலனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25வீத வரியை விதிப்பது என்று அமெரிக்க ஜனாதிபதி நேற்று அறிவித்திருந்தார்.

நண்பனாக இருந்தாலும், யுக்ரைனில் கொலைகளை செய்யும் ரஷ்யாவுடன் இந்தியா கொண்டிருக்கும் நட்பை கருத்திற்கொண்டு இந்த வரியை விதிப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் அமெரிக்காவின் அறிவிப்பின் தாக்கங்களை தாம் ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்டுள்ள இந்தியா, அண்மையில் ஐக்கிய இராச்சியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டமை உட்பட்ட, தேசிய நலனை கருத்திற்கொண்டு எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் அமெரிக்காவுடன் தொடர்ந்தும் பேச்சு நடத்தப்படும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

What's your reaction?

Related Posts

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி

13 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தமை மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட கூற்றுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை சடுதியாக சரிவடைந்துள்ளது. WTI கச்சா எண்ணெய்…