இலங்கை

துரியன் விதை தொண்டையில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழப்பு!

எஹெலியகொட, பரகடுவ பகுதியில், நபர் ஒருவரின் தொண்டையில் துரியன் விதை சிக்கி உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 86 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆரியதாச வீரசிங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி ஹரிந்திர லக்மினா தென்னகோன் என்பவரால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாட்சியமளித்த உயிரிழந்தவரின் மனைவி, தனது கணவரின் தொண்டையில் சிரமம் ஏற்பட்டதாகவும், என்ன நடந்தது என்று கேட்ட போது, ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதாக அவர் கூறினார்.

அவர் இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மனைவி தெரிவித்தார்.

எனினும் பிரேத பரிசோதனையில் துரியன் விதை தொண்டையில் சிக்கியதால் மரணம் ஏற்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…