விளையாட்டு

கனடா ஓபன் டென்னிஸ்: ஷெல்டன் – டெய்லர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

முன்னணி வீர வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. 

இதில் ஆண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் அலெக்ஸ் டி மினௌர் (அவுஸ்திரேலியா) மற்றும் பெஞ்சமின் ஷெல்டன் (அமெரிக்கா) ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் ஷெல்டன் 6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். 

மற்றுமொரு காலிறுதி ஆட்டத்தில் டெய்லர் ஃபிரிட்ஸ் (அமெரிக்கா) மற்றும் ஆண்ட்ரி ரூப்லேவ் (ரஷ்யா) ஆகியோர் மோதினர். 

இந்த ஆட்டத்தில் டெய்லர் ஃபிரிட்ஸ் 6-3, 7-6 (7-4) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 

அரையிறுதி ஆட்டத்தில் ஷெல்டன்- டெய்லர் ஃபிரிட்ஸ் நாளை மோதுகின்றனர்.

What's your reaction?

Related Posts

இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய இரண்டாம்…