No products in the cart.
அக்காவின் கண்முன்னே பலியான தங்கை!
தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சீகோட்டையை சேர்ந்தவர் ஜான்பாஷா. விவசாயியான அவருக்கு அல்பியா (வயது 6), ஆஷியா (3) ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.
தனியார் பாடசாலையில் அல்பியா 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று பாடசாலை சென்று விட்டு மாலையில் பாடசாலை பஸ்சில் அல்பியா திரும்பி வந்தார்.
தனது அக்காவை பார்த்ததும் ஓடி சென்ற தங்கை ஆஷியா பஸ்சின் முன்புற சக்கரத்தின் அருகில் சென்றாள். இதை அறியாத சாரதி பஸ்ஸை இயக்கியதால் சிறுமி ஆஷியா, பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், உறவினர்கள் பஸ்சின் கண்ணாடியை உடைத்தனர். மேலும் சாரதியை கைது செய்யக்கோரி பொதுமக்கள் தேன்கனிக்கோட்டையில் அஞ்செட்டி சாலையில் மறியலில் இடுபட்டனர்.
தகவல் அறிந்த வந்த பொலிஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக தேன்கனிக்கோட்டை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.