No products in the cart.
ரிஷப் பான்டிடம் மன்னிப்பு கேட்ட வோக்ஸ்
இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பான்ட் காயமடைந்தார்.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து, ரிஷப் பான்ட்டின் வலது கால் பாதத்தில் தாக்கியது.
இதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இருப்பினும், துடுப்பாட களமிறங்கிய ரிஷப் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்டில் இருந்து விலகினார்.
அதேபோல் ஐந்தாவது டெஸ்டில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில், கிறிஸ் வோக்ஸ்க்கு இடது தோளில் காயம் ஏற்பட்டது.
அணியின் வெற்றிக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில், ஒற்றை கையுடன் துடுப்பாட அவர் களமிறங்கினார்.
ரிஷப் மற்றும் வோக்சின் செயல் கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.
இதனிடையே சமூக வலைத்தளத்தில், வோக்ஸ் துடுப்பாட களமிறங்கிய படத்தை பதிவு செய்து, ‘எல்லாம் சரியாகி விடும். உங்கள் காயம் குணமடைய வாழ்த்துகிறேன். மீண்டும் சர்வதேச அரங்கில் ஒருநாள் சந்திப்போம், ‘சல்யூட்’ என தெரிவித்து இருந்தார் ரிஷாப்.
இதுகுறித்து வோக்ஸ் கூறுகையில், உங்கள் அன்புக்கு நன்றி, எனது பந்துவீச்சில் உங்கள் கால் எலும்பில் முறிவு ஏற்பட்டதற்கு மன்னித்து விடுங்கள். உங்கள் காலில் ஏற்பட்ட காயம் விரைவில் சரியாகும் என நம்புகிறேன்,” என தெரிவித்துள்ளார்.
ரிஷப் பான்ட் காயத்தில் இருந்து குணமடைவதற்கு சுமார் ஆறு வாரங்கள் தேவைப்படுகிறது.
அதேநேரம் ஆசிய கிண்ணம் மற்றும் மேற்கிந்திய தீவுகள் தொடர்களில் ரிஷப் பான்ட் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.