No products in the cart.
இணையத்தில் அதிரும் கூலியின் புதிய சாதனை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, அமிர்கான், சவுபின் ஷகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் கூலி.
இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ஒகஸ்ட் 14ஆம் திகதி வெளியாக உள்ள ‘கூலி படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது.
கூலி டிரைலர் வௌியான 24 மணி நேரத்தில் ரஜினியின் முந்தைய சாதனையான ‘ஜெயிலர்’ டிரைலரின் சாதனையை முறியடித்தது.
விஜய்யின் 24 மணி நேர டிரைலர் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்கவில்லை.
தற்போது ‘கூலி’ தமிழ் டிரைலர் 21 மில்லியன் பார்வையாளர்களை யு டியூப் தளத்தில் கடந்துள்ளது.
ஹிந்தி டிரைலர் 2 யுடியூப் தளங்களில் 9 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கு டிரைலர் 7 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது.
நேற்று மாலை இப்படத்தின் கன்னட டிரைலர் வெளியாகி அது 2 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
‘கூலி’ படத்தின் பாடல்களில் ‘மோனிகா’ தமிழ் பாடல் 59 மில்லியன் பார்வைகளையும், தெலுங்குப் பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது. மற்ற பாடல்களை விடவும் இந்தப் பாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.