No products in the cart.
நடிகை தமன்னா இன்று இலங்கை வருகை
பிரபல இந்திய நடிகை தமன்னா பாட்டியா இன்று மாலை (09) இலங்கைக்கு வருகைதர உள்ளார்.
இந்திய விளம்பரம் ஒன்றின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை வருகிறார்.
இந்த விளம்பரத்தை இந்தியாவின் Big Momma தயாரிப்பு நிறுவனம் மற்றும் இலங்கையில் வெளிநாட்டு படங்கள் மற்றும் ஏனைய தயாரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனமான ASIAN FILM CREW தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
‘Mysore Sandal Soap’ தொடர்பான விளம்பரத்தில் நடிகை தமன்னா பங்கேற்கவுள்ளதோடு, இந்த படப்பிடிப்பு அனுராதபுரத்தை மையமாகக் கொண்ட Palm Garden Village ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
நடிகை தமன்னா இதற்கு முன்பு பல முறை இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
தற்போது படப்பிடிப்பிற்காக இலங்கை வரும் நடிகை தமன்னா, சில நாட்கள் இங்கு தங்கியிருக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.