No products in the cart.
முதன் முறையாக சம்பியன் பட்டம் வென்ற விக்டோரியா எம்போகோ
கனடா பகிரங்க டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் கனடாவின் விக்டோரியா எம்போகோ (Victoria Mboko) சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
கனடாவின் மன்ட்ரியல் நகரில், மகளிருக்கான டபிள்யு.டி.ஏ. நேஷனல் பங்க் பகிரங்க டென்னிஸ் தொடர் நடந்தது.
இதன் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகாவை, கனடாவின் விக்டோரியா எம்போகா எதிர்த்தாடினார்.
போட்டியின் முதல் செட்டை ஒசாகா 6-2 எனக் கைப்பற்றினார்.
பின்னர் இடம்பெற்ற, 2வது செட்டை எம்போகா 6-4 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் தீர்மானமிக்க 3வது செட்டில் மீண்டும் அசத்திய கனடா வீராங்கனையான எம்போகா அதனை 6-1 என கைப்பற்றினார்.
இரண்டு மணி நேரம், 4 நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் அசத்திய எம்போகோ 2-6, 6-4, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, டபிள்யு.டி.ஏ. ஒற்றையர் பிரிவில் தனது முதல் சம்பியன் பட்டத்தை பெற்றார்.
சொந்த மண்ணில் கிண்ணத்தை வென்ற 3வது கனேடிய வீராங்கனையானார் எம்போகோ. இதற்கு முன் கனடாவின் பே அர்பன் (1969), பியான்கா (2019) இல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தனர்.
கனடா பகிரங்க டென்னிஸ் தொடரில் அசத்திய எம்போகோ, கிராண்ட்ஸ்லாம் சம்பியன்களான அமெரிக்காவின் சோபியா கெனினை 2வது சுற்றிலும், கோகோ காப் 16வது சுற்றிலும், கஸகஸ்தானின் ரிபாகினாவை அரையிறுதியிலும், ஜப்பானின் ஒசாகாவை இறுதிப் போட்டியிலும் வீழ்த்தினார்.
இதனையடுத்து டபிள்யு.டி.ஏ ஒற்றையர் பிரிவு தரவரிசையில் விக்டோரியா எம்போகோ 85வது இடத்தில் இருந்து முதன்முறையாக 24 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.