இலங்கை

பொரளை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

பொரளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் பொரளை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் இன்று (09) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு எமது ‘அத தெரண’ செய்திப் பிரிவுக்கு உறுதிப்படுத்தியது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொரளை பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது. 

பொரளை, சஹஸ்புர விளையாட்டு மைதானத்தை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் குழு மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றனர். 

சம்பவம் தொடர்பில் இளைஞர்கள் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவர்களில் ஒருவர் மரணமடைந்தார். 

உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்றும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மேலும் மூன்று பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை கொழும்பு குற்றப்பிரிவு மேற்கொண்டு வருகிறது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…