விளையாட்டு

சஞ்சு சாம்சனுக்கு பதிலா ருதுராஜ்!

2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்னும் 3 மாதங்களில் நடக்கவுள்ளது. அதற்கு முன்பாக எதிர் அணிகளில் இருந்து டிரேட் செய்து சில வீரர்களை வாங்க முயற்சிகள் நடந்து வருகிறது. குறிப்பாக சிஎஸ்கே அணி மினி ஏலத்திற்கு முன்பாகவே தங்களது அணியை கட்டமைக்க முடிவு எடுத்திருக்கிறது.

அந்த வகையில் ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்க முயற்சித்து வருகிறது. அதற்கேற்ப ராஜஸ்தான் அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு சஞ்சு சாம்சனும் கோரிக்கை வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சஞ்சு சாம்சனுக்கு நிகரான மாற்று வீரரை வாங்கிவிட வேண்டும் என்று ராஜஸ்தான் அணி ஆலோசித்து வந்தது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பேச்சுவார்த்தைக்கு ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் மனோஜிடம் இருந்து பதில் வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி ராஜஸ்தான் அணியின் தலைவரை சஞ்சு சாம்சனை கொடுக்க வேண்டுமென்றால், சிஎஸ்கே அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ரவீந்திர ஜடேஜா அல்லது சிவம் துபே ஆகிய மூவரில் ஒருவரை கொடுக்க வேண்டும் என்று டிமாண்ட் வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி தரப்பில் எந்த வீரரையும் கொடுக்க முன் வரவில்லை.

What's your reaction?

Related Posts

இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய இரண்டாம்…