இலங்கை

பொது சுகாதார பரிசோதகர்கள் என கூறி மோசடி – பொது மக்களுக்கு எச்சரிக்கை!

பொது சுகாதார பரிசோதகர்கள் என தங்களை அடையாளப்படுத்தி இடம்பெறும் மோசடி செயற்பாடுகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பணம் சம்பாதிக்கும் நோக்கில் இவ்வாறாான மோசடி செயற்பாடுகள் இடம்பெறுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர்  சமில் முத்துக்குடா அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை முதல் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…