விளையாட்டு

ஆசிய கிண்ணத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும்

ஆசிய கிண்ண 2025 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 ஆம் திகதி தொடங்கவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14 ஆம் திகதி மோதுகின்றன.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான ஹர்பஜன் சிங், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக, தனியார் செய்தி நிறுவனத்துக்கு ஹர்பஜன் சிங் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது,

எல்லையில் நமது வீரர்கள் உயிரைத் தியாகம் செய்து கொண்டிருக்கும்போது, நாம் எப்படி பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட முடியும்?

இது மிகவும் சாதாரண விஷயம். ஒரு கிரிக்கெட் போட்டியைத் தவிர்ப்பதால் ஒன்றும் குறைந்துவிடாது. நமது ராணுவ வீரர்களின் தியாகம் மகத்தானது, அதனுடன் ஒப்பிடும்போது கிரிக்கெட் எல்லாம் ஒன்றுமே இல்லை.

எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவும்போதும், இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நீடிக்கும்போதும், நாம் கிரிக்கெட் விளையாடச் செல்வது சரியாக இருக்காது.

இந்தப் பெரிய பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை கிரிக்கெட் என்பது மிகவும் சிறிய விஷயம். தேசமே எப்போதும் முதன்மையானது.

ரத்தமும் நீரும் ஒன்றாக ஓடமுடியாது என்பது நமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின்…