விளையாட்டு

ஆசிய கிண்ணத் தொடரில் பும்ரா?

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா நடைபெறவுள்ள ஆசிய கிண்ணத் தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பணிச்சுமை காரணமாக இந்த தொடரில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் பும்ரா விளையாட உள்ளதாக கூறப்படுகின்றது. இது இந்திய அணிக்கு பலமாக அமையும் என கருதப்படுகிறது. 

ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா 3 போட்டிகளில் மட்டும் விளையாடிய நிலையில், இந்தியாவுக்கு திரும்பியிருந்தார். 

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது. 

இதில் நடப்பு சம்பியன் இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கவுள்ளன. 

அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலக கிண்ணத் தொடருக்கு, ஆசிய அணிகளை தயார் படுத்துவதற்காக இந்த தொடர் இம்முறை இருபதுக்கு 20 வடிவில் நடத்தப்பட உள்ளது. 

இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ், ஹொங்கொங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. 

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

What's your reaction?

Related Posts

இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய இரண்டாம்…