விளையாட்டு

ஆசிய கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

ஆசிய கிண்ணத் தொடருக்கான 17 பேர் கொண்ட பாகிஸ்தான் குழாம் இன்று (17) அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ள முத்தரப்பு தொடர் மற்றும் அதன் பின்னர் நடைபெறும் ஆசிய கிண்ணத் தொடருக்கு சல்மான் அலி அஹா (Salman Ali Agha) வழி நடத்தவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அணியில் பாபர் அசாம் மற்றும் மொஹமட் ரிஷ்வான் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

இதற்கமைய, ஆசிய கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் குழாமில், 

Salman Ali Agha (c), Abrar Ahmed, Faheem Ashraf, Fakhar Zaman, Haris Rauf, Hasan Ali, Hasan Nawaz, Hussain Talat, Khushdil Shah, Mohammad Haris (wk), Mohammad Nawaz, Mohammad Waseem Jnr, Sahibzada Farhan, Saim Ayub, Salman Mirza, Shaheen Shah Afridi and Sufyan Moqim ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது. 

இதில் நடப்பு சம்பியன் இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கவுள்ளன. 

அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலக கிண்ணத் தொடருக்கு, ஆசிய அணிகளை தயார் படுத்துவதற்காக இந்த தொடர் இம்முறை இருபதுக்கு 20 வடிவில் நடத்தப்பட உள்ளது. 

இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ், ஹொங்கொங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. 

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

What's your reaction?

Related Posts

இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய இரண்டாம்…