உலகம்

சீனாவுக்கு விரைவில் தக்க பதிலடி உண்டு ; உறுதியாய் நிற்கும் ட்ரம்ப்

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக தற்போதைக்கு சீனாவுக்கு பதிலடி இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கப்படுவது உறுதி என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவும் இந்தியாவும் ரஷ்யாவிடமிருந்து மிக அதிக அளவில் மசகு எண்ணெய் வாங்குகின்றன. அண்மையில் அதனைக் காரணங்காட்டி இந்தியாவுக்குக் கூடுதலாக 25 சதவீதம் வரியை ட்ரம்ப் விதித்தார்.

ஆனால் சீனா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பற்றி அவர் உறுதியாக எதுவும் சொல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான வரி விதிக்கப்பட்டால் சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும். இந்நிலையில் சீனாவும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேசி வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…