பொலிஸ் பொறுப்பதிகாரியை மோதித் தள்ளிய வேன்

விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த களுத்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துஷார சில்வா மீது ​​வேன் ஒன்று மோதியுள்ளது. 

பாணந்துறை திசையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்தபோது, வஸ்கடுவ – வாடியமன்கட பகுதியில் நேற்று இரவு (22) இவ்வாறு ​​வேன் மோதியதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் காயமடைந்த பொலிஸ் பொறுப்பதிகாரி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

வேன் பொலிஸாரால் பொறுப்பேற்க்கப்பட்டுள்ளதுடன், சாரதி கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version