No products in the cart.
பொலிஸ் பொறுப்பதிகாரியை மோதித் தள்ளிய வேன்
விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த களுத்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துஷார சில்வா மீது வேன் ஒன்று மோதியுள்ளது.
பாணந்துறை திசையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்தபோது, வஸ்கடுவ – வாடியமன்கட பகுதியில் நேற்று இரவு (22) இவ்வாறு வேன் மோதியதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த பொலிஸ் பொறுப்பதிகாரி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வேன் பொலிஸாரால் பொறுப்பேற்க்கப்பட்டுள்ளதுடன், சாரதி கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.