No products in the cart.
கனடாவில் மசாஜ் சிகிச்சை நிபுணரின் மோசமான செயல்
கனடாவின் ஒன்டாரியோவின் ஃபோர்ட் எரியில் உள்ள ஒரு சிகிச்சை மையத்தில் பணிபுரிந்த மசாஜ் சிகிச்சையாளர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தனது வாடிக்கையாளர்களில் சிலரை சிகிச்சையின் போது பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
59 வயதான இவோ இவானோவ் என்ற நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணையாளர்கள், மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக தகவல் வைத்திருப்பவர்கள் நயாகரா காவல்துறையின் பாலியல் தாக்குதல் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.