இலங்கை

யாழில் உணவகத்தை வதிவிடமாக பயன்படுத்தியவருக்கு தண்டம்

  யாழில் உணவகத்தை வதிவிடமாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் உணவக உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட பரிசோதனையில் உணவக உரிமையாளருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

உடல்நலத்தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஊழியர்களை உணவகத்தில் அனுமதித்தமை, உணவகத்தில் கடமை புரியும் ஊழியர்கள் தனிநபர் சுகாதாரம் பேணாமை, இலையான் பெருக இடமளித்தமை, குடிப்பதற்கும் சுத்திகரிப்பிற்கும் பயன்படும் நீரானது குடிக்கத்தக்கது என உறுதி செய்ய தவறியமை, உணவகத்தினை வதிவிடமாக பயன்படுத்தியமை ஆகிய குற்றங்கள் கண்டறியப்பட்டு, அவருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.  

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…