இலங்கை

மசாஜ் நிலையம் எனும் போர்வையில் விபச்சார விடுதி – 10 வெளிநாட்டுப் பெண்கள் கைது

ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றில் மூன்று நாடுகளைச் சேர்ந்த 10 வெளிநாட்டுப் பெண்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுர்வேத மசாஜ் நிலையம் எனும் போர்வையில் விபச்சார விடுதியாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் இடமொன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போதே அந்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கொள்ளுப்பிட்டியில் உள்ள காலி வீதியில் உள்ள இடமொன்றில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவரிடமிருந்து வரி இல்லாத சிகரெட்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…