இலங்கை

இந்திய மீனவர்கள் மூவர் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (28) அதிகாலை கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர்கள் பயணித்த படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதானவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த மீனவர்களை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…