No products in the cart.
கொழும்பில் கொட்டித் தீர்த்த மழை – போட்டி கைவிடப்பட்டது!
ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரினுடைய சுப்பர் 8 சுற்றின் நேற்றைய போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறவிருந்த குறித்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவிருந்தன.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இருப்பினும் இடைவிடாத மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த இரு அணிகளுக்கு தலா ஒவ்வொரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
















