இலங்கை

கொட்டாஞ்சேனை மக்கள் வங்கியில் தீ விபத்து!

கொழும்பு -கொட்டாஞ்சேனை மக்கள் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்தானது இன்று 18 ஆம் திகதி  காலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கியிலுள்ள  குளிரூட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தினையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்று தீயணைப்பு  வாகனங்கள் தற்போது தீயணைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…