இலங்கை

மின்னல் தாக்கம் குறித்து 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கடுமையான மின்னல் தாக்கம் குறித்து 20 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது

இந்த எச்சரிக்கை இன்றிரவு 11.00 மணி வரை அமலில் இருக்கும் என்றும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் கடுமையான மின்னலுடன் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தற்காலிகமாக குறித்த பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது

இந்நிலையில் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் அபாயங்களைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…