இலங்கை

பள்ளி மாணவியின் சோக மரணம் – பேருந்து விபத்தில் உயிரிழப்பு


மட்டக்குளியில் பேருந்து ஒன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார். 

மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (10) நண்பகல் பேருந்திலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முயன்ற பாடசாலை மாணவி ஒருவர், அதே பேருந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். 

விபத்தில் படுகாயமடைந்த மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

உயிரிழந்த மாணவி மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயதுடையவர் ஆவார். 

சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…