இலங்கை

மட்டக்களப்பில் தோட்டத்தில் காயமடைந்த நிலையில் சடலம்மீட்பு


மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள கெல்பேஜ் வீட்டுத்திட்ட வீதியிலுள்ள மிளயாக் தோட்டமொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று குறித்த சடலத்தை (19.04.2026) மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் களுவாஞ்சிகுடியை சேர்ந்த 58 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான காசிநாதன் ஜெயகாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனது தோட்டத்தில் சனிக்கிழமை வரையும் வேலை செய்து விட்டு உறங்கிக் கொண்டிருந்த குறிதத நபரே இவ்வாறு ஞாயிற்றுக் கிழமை இரத்தம் தோய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தனது தோட்டத்தில் உள்ள குடிசையில் உறங்கி கொண்டிருந்த நபரே இவ்வாறு பலத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதனை அவதானித்த உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…