இலங்கை

தற்போதைய அரசின் செயற்பாடுகள் மீது கடும் விமர்சனம் – சாகர காரியவசம் குற்றச்சாட்டு

“நிதி மோசடிகளில் ஈடுபட்டு வரும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு, ஒட்டுமொத்தமாகக் கலைந்து வீட்டுக்குச் செல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

தற்போதைய அரசு பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்த அரசு மக்களின் நம்பிக்கையைத் துஷ்பிரயோகம் செய்து வருகின்றது.

அரசின் முறையற்ற நிர்வாகத்தால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். விரைவில் இந்த அரசு பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்படும்.

மக்களின் பலத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் பலமான முறையில் ஆட்சியமைப்பது உறுதி  என  சுட்டிக்காட்டியுள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…