இலங்கை

இன்று எரிபொருள் விலை உயர்வு குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை


இன்றைய தினம் (மே 01) எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விலை திருத்தங்கள் குறித்து உரிய நேரத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என கூட்டுத்தாபனத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

கடந்த மார்ச் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விலை அதிகரிப்பிற்குப் பிறகு, சந்தையில் தற்போது நிலவும் விலைகளே தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, 92 ஒக்டேன் ரக பெற்றோல் 398 ரூபாய்க்கும், 95 ஒக்டேன் ரக பெற்றோல் 455 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. 

அதேநேரம் ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் 382 ரூபாய்க்கும், ஒரு லீட்டர் சூப்பர் டீசல் 443 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 

ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 255 ரூபாய்க்கும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…