இலங்கை

மீண்டும் எரிபொருள் விலையில் அதிகரிப்பு? அமைச்சரின் அறிவிப்பு

உலகச் சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு, செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைத் திருத்தம் இடம்பெறக்கூடும் என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். 

காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

தற்போது எரிபொருள் விலையானது ஏற்கனவே உயர்வான மட்டத்தில் காணப்படுகின்ற நிலையில், மேலும் ஒரு விலை அதிகரிப்பை மக்களால் தாங்கிக்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் அரசாங்கத்திற்குள் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…