இலங்கை

ரிட்டிகஹ ஓயாவில் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

அவிசாவளை – புலத்கோஹுபிட்டிய வீதியின் பொல்கட்டுவங்குவ பகுதிக்கு அருகில் பாயும் ரிட்டிகஹ ஓயாவில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழந்தார். இன்று (20) காலை பெய்த பலத்த மழை காரணமாக ரிட்டிகஹ ஓயாவின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்த நிலையில், இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. பிரதேச மக்களும், ருவன்வெல்ல பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, அவர் விழுந்த இடத்திற்குச் சற்றுக் கீழேயுள்ள நீர்நிலையொன்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு தவறி வீழ்ந்து உயிரிழந்தவர் அம்பாகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், பிரேதப் பரிசோதனை கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…