இலங்கை

அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு: துப்பாக்கிதாரி உட்பட நால்வர் கைது!

அத்துருகிரிய பொலிஸ் பிரிவில் இரண்டு மனிதக் கொலைகளைச் செய்த சம்பவத்தின் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதியும் இந்த மாதம் 08 ஆம் திகதியும் அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குள் இடம்பெற்ற இந்த இரண்டு மனிதக் கொலைகள் தொடர்பில் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியிருந்தனர். அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த குற்றத்திற்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட இச்சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 21, 24, 41 மற்றும் 45 ஆகிய வயதுடைய பாதுக்கை, பண்டாரகம, மொரந்துடுவ மற்றும் அலுபோமுல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…