No products in the cart.
செலான் வங்கியின் சிரேஷ்ட நிர்வாகத்தினரும் ஊழியர்களும் ஆடிவேல் தேர்பவனியை பக்தியுடன் வரவேற்றனர்
ஆடிவேல் தேர் திருவிழா என்று பிரபலமாக அழைக்கப்படும் வருடாந்த ஆடிவேல் திருவிழா சமீபத்தில் நடைபெற்றது.
காலி வீதி வழியாக பயணித்த தேர் பவனி, செலான் வங்கி தலைமை அலுவலகத்தில் சிறிது நேரம் தரிசனத்திற்காக தரித்து நின்று பம்பலப்பிட்டியில் உள்ள ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவிலை அடைந்தது.
செலான் வங்கியின் நிர்வாகத்தினரும் ஊழியர்களும் வேல் இரதங்களை பக்தியுடன் வரவேற்றதுடன் அங்கு இடம்பெற்ற சிறப்பு பூஜைகளின் போது ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டனர். இதன் போது, வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் பானங்கள் மற்றும் பலகாரங்களை விநியோகித்தமை உள்வாங்கல் மற்றும் இதயபூர்வமான தருணங்களுக்கான செலான் ஊழியர்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது.