வணிகம்

வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த NDB வங்கி அக்கரைப்பற்று கிளையை புதிய இடத்தில ஆரம்பித்துள்ளது

NDB வங்கியானது தனது அக்கரைப்பற்று கிளையை அம்பாறை வீதியில் இலக்கம் 71 இல் அமைந்துள்ள அதன் புதிய கட்டிடத்தில் செப்டம்பர் 10, 2025 அன்று வைபவ ரீதியாக திறந்து வைத்தது. இது சமூகத்திற்கு சேவை செய்யும் அதன் தொடர்ச்சியான பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிப்பதாக அமைந்துள்ளது. 

2015 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட அக்கரைப்பற்று கிளையானது அன்று முதல், ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிராந்தியம் முழுவதும் உள்ள குடும்பங்கள், தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வர்த்தகங்கங்களுக்கு நிதியுதவியை வழங்கி ஆதரிப்பதன் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு பெருமிதத்துடன் சேவையாற்றி வருகிறது, இந்த கிளையானது அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட வசதி, நவீன வசதிகள் மற்றும் உயர்ந்த வங்கி அனுபவத்தை வழங்குவதற்கான வங்கியின் நோக்கம் கருதி மிகவும் மையமான மற்றும் அணுகக்கூடிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த புதிய வங்கிக்கிளை திறப்பு விழாவில் NDB வங்கியின் சிரேஷ்ட துணைத்தலைவர் சஞ்சய பெரேரா, சில்லறை வங்கிப்பிரிவின் துணைத் தலைவர் ஸிஹான் ஹமீத், வடகிழக்கு பிராந்தியத் தலைவர் பிருந்தபன் செல்வநாயகம், வர்த்தக நிதி, கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுகளுக்கான உதவி துணைத் தலைவர் கங்கா வணிகரத்ன, கிளை செயல்பாடுகளின் தலைவர் வின்ஜய ஜயசிங்க, இஸ்லாமிய வங்கிப்பிரிவு தலைவர் பஹார் நாயன் உள்ளிட்ட வங்கியின் சிரேஷ்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும் NDB யின் ஊழியர்கள் மற்றும் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்வில்உரையாற்றிய NDB வங்கியைச்சேர்ந்த சஞ்சய பெரேரா, “இந்த இடமாற்றம் அக்கரைப்பற்று கிளைக்கு ஒரு புதிய தொடக்கத்தை மட்டுமல்ல, இந்தப் பிராந்திய மக்களுக்கு ஒரு புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் நவீனமயமாக்கப்பட்ட வங்கி அனுபவத்தை எமது வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதில் நாம் பெருமை கொள்கிறோம், அதே வேளை NDB ஷரீக்கின் கீழ் ஒரு பிரத்தியேக இஸ்லாமிய வங்கிப் பிரிவை நிறுவுவதன் மூலம் பாரிய வங்கிச்சேவையை முன்னோக்கி எடுத்துச் செல்கிறோம். அக்கரைப்பற்று மற்றும் அதற்கு அப்பால் உள்ள தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் வர்த்தகங்களுக்கு நம்பகமான நிதியியல் பங்காளராக திகழ்வதே எமது முதன்மையான நோக்கமாகும். 

மேலதிகமாக, இந்த நிகழ்வானது குத்தகை, பணவைப்புகள்,கடனட்டைகள், அரலிய சேமிப்பு, நிலையான பண வைப்பு , வர்த்தக வங்கிபிரிவு செயற்பாடுகள் (SMEகள்) மற்றும் ஷில்ப சிறுவர் சேமிப்பு போன்ற முக்கிய வங்கிச்சேவைகள் தொடர்பாக கிளைக்கு வருகை புரிந்த முதல் வாடிக்கையாளர்களை சம்பிரதாயபூர்வமாக அங்கீகரிக்கும் நிகழ்வாகவும் அமைந்திருந்தது. எமது புதிய அக்கரைப்பற்று கிளையானது, NDB இன் நம்பகத்தன்மை, புத்தாக்கம் மற்றும் சிறப்போடு பிராந்தியம் முழுவதும் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும்வர்த்தகங்களுக்கு சேவை செய்யத் தயாராக உள்ளது. 

NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல் மற்றும் நிதி சில்லறை வங்கியியல் விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக இலங்கையின் LMD சஞ்சிகையினால் வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது.Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின் வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டது. மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும்,இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல் மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளினை பயன்படுத்தி அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.

What's your reaction?

Related Posts

ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனியுடன் கைகோர்த்து அமெரிக்க உறக்கம்சார் தீர்வுகள் வழங்குனரான Englander இலங்கையில் பிரவேசம்

இலங்கையின் மாபெரும் மற்றும் பரந்தளவு பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற மெத்தை தொழினுட்ப நிறுவனமான Englander International உடன் இணைந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற மெத்தைகளை…