வணிகம்

DFCC வங்கி, 70 ஆண்டுகள் பூர்த்தியைக் குறிக்கும் வகையில் சந்தையில் மிகச் சிறந்த நிலையான வைப்பு வரப்பிரசாதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

நம்பிக்கை மற்றும் வளர்ச்சியில் 70 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் DFCC வங்கி, பாதுகாப்பு, மற்றும் நெகிழ்திறன் ஆகியவற்றை ஒன்றிணைத்து, சந்தையில் கிடைக்கும் மிகச் சிறந்த வட்டி வீதங்கள் சிலவற்றுடன் ஆண்டு நிறைவு நிலையான வைப்பு வரப்பிரசாதத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வெகுமதியாக வழங்குகின்றது. 

அந்த வகையில், 100 மற்றும் 200 தினங்களுக்கான பிரத்தியேக குறும் தவணை நிலையான வைப்புக்களுக்கு 7.5% என்ற வருடாந்த வட்டி வீதத்திலிருந்து ஆரம்பித்து (ஆண்டு சமான வீதம் முறையே 7.71% மற்றும் 7.63%), 8.0% என்ற வருடாந்த வட்டி வீதம் வரை (ஆண்டு சமான வீதம் 8.06%) பல்வேறு தெரிவுகளை வாடிக்கையாளர்கள் இதன் மூலமாகப் பெற்றுக்கொள்ள முடியும். நீண்ட தவணை ஸ்திரப்பாட்டை நாடுகின்ற வாடிக்கையாளர்களுக்கு ஐந்து ஆண்டு வைப்புக்களுக்கு 11.5% வரையான வருடாந்த வட்டி வீதத்தை (ஆண்டு சமான வீதம் 9.51%) DFCC வங்கி அவர்களுக்கு வழங்குவதுடன், இரண்டு, மூன்று, மற்றும் நான்கு ஆண்டு தவணை கொண்ட நிலையான வைப்புக்களுக்கும் கவர்ச்சியான வட்டி வீதங்கள் வழங்கப்படுகின்றன. 

DFCC வங்கியின் தனிநபர் வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிப் பிரிவு ஆகியவற்றுக்கான சிரேஷ்ட உப தலைவர் ஆசிரி இத்தமல்கொட அவர்கள் கூறுகையில், “70 ஆண்டுகளை எட்டியுள்ளமை என்பது வெறுமனே நாம் கடந்து வந்த பாதையையும், நிலைநாட்டியுள்ள சாதனைகளையும் இரைமீட்டுவது மாத்திரமல்ல, இன்று எமது வாடிக்கையாளர்களுன்கு மகத்தான மதிப்பை வழங்குவதே அதன் சிறப்பு. இந்த நிலையான வைப்பு வரப்பிரசாதத்துடன், உடனடி தேவைகளுக்கான குறுகிய தவணை நெகிழ்திறன், மற்றும் எதிர்காலத் திட்டமிடலுக்கான நீண்ட தவணைப் பாதுகாப்பு ஆகிய இரண்டையும், சந்தையில் மிகச் சிறந்த வட்டி வீதங்களுடன் நாம் எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி, அவர்கள் சேமிப்பதற்கு உதவுகின்றோம்.” 

நாடளாவியரீதியிலுள்ள DFCC வங்கியின் அனைத்து கிளை வலையமைப்புக்கள் மூலமாகவும் இந்த நிலையான வைப்பு வரப்பிரசாதம் கிடைக்கப்பெறுகின்றது. தமது முதலீடுகளைப் பாதுகாத்து, வங்கியின் 70 ஆண்டு கால நம்பிக்கை, நெகிழ்திறன், மற்றும் புத்தாக்கம் கொண்ட பயணத்தில் அங்கம் வகிக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம். இது தொடர்பான கூடுதல் தகவல் விபரங்களை www.dfcc.lk என்ற தளத்திற்கு செல்வதன் மூலமாகவோ அல்லது 0112350000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலமாகவோ அறிந்து கொள்ள முடியும்.

What's your reaction?

Related Posts

ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனியுடன் கைகோர்த்து அமெரிக்க உறக்கம்சார் தீர்வுகள் வழங்குனரான Englander இலங்கையில் பிரவேசம்

இலங்கையின் மாபெரும் மற்றும் பரந்தளவு பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற மெத்தை தொழினுட்ப நிறுவனமான Englander International உடன் இணைந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற மெத்தைகளை…