No products in the cart.
4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா!
ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட்தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று இந்திய அணி அசத்தியுள்ளது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (15) நடைபெற்ற முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் – ஓமன் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களை பெற்றது. பின்னர் 173 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஓமன் அணி 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வியின் மூலம் ஓமன் அணி தொடரில் இருந்து வெளியேறியது. இதன்மூலம், குரூப் A சுற்றில் உள்ள இந்திய அணி முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்திய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று +4.793 நெட் ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சூப்பர் 4 வாய்ப்பை இழந்த ஓமன் அணியுடன் வரும் 19 ஆம் திகதி இந்தியா மோதுகிறது.