No products in the cart.
செலிங்கோ லைஃப் NAFLIA 2025 விருதுகள் நிகழ்வில் 14 விருதுகளுடன் உயர் கௌரவங்களை வென்றது
இலங்கை காப்புறுதி சங்கத்தால் (IASL) செய்யப்படும் ஏற்பாடு வருடாந்தம் முதன்மையான நிகழ்வான ஆயுள் காப்புறுதி ஆலோசகர்களுக்கான தேசிய மன்றம் (NAFLIA) 2025 இல், செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் விற்பனை வல்லுநர்கள் 14 விருதுகளைப் பெற்றதன் மூலம், இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் அதன் ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு நிகழ்வில் செலிங்கோ லைஃப் பாரிய அளவிலான நிறுவனம் பிரிவில் ஆதிக்கம் செலுத்தியதுடன் பெரும்பாலான உயர் விருதுகளை வென்றது. குறிப்பிடத்தக்க வகையில், நிறுவனத்தின் பல பிரதிநிதிகள் தேசிய விருதுகளை வென்றதுடன் இவர்கள் பாரிய அளவிலான நிறுவனங்களிடையே மட்டுமல்லாது நடுத்தர மற்றும் சிறிய காப்புறுதி நிறுவனங்களுடனும் போட்டியிட்டு விருதுகளை வென்றனர். இந்த வெற்றியானது நிறுவனத்தின் சிறந்த பயிற்சிகள் கலாசாரம், ஆலோசகர் வலையமைப்பு மற்றும் சிறந்த தரநிலைகளின் குறிப்பிடத்தக்க நிரூபணமாக திகழ்கிறது.
இந்த சாதனை தொடர்பாக செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. ரங்க அபேநாயக்க கூறுகையில், தொழில்முறை ரீதியாக தகுதி வாய்ந்த, உயர் பயிற்சி பெற்ற மற்றும் நெறிமுறை சார்ந்த விற்பனை குழுவானது எந்தவொரு நிறுவனத்திற்கும் விலைமதிப்பற்ற சொத்தாக திகழ்கிறது. இந்த விருதுகள் சிறந்த குழுப்பணி மற்றும் ஊக்கமளிக்கும் தலைமைத்துவத்துடன் இணைந்து தனிப்பட்ட சிறப்பின் மூலம் எவ்வாறு அற்புதமான பிரதிகளுக்களை அடைய முடியும் என்பதை நிரூபிக்கின்றன. எமது நிறுவனத்திள் அனைத்து வெற்றியாளர்களுக்கும் எமது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
விற்பனை ஆலோசகர் (வங்கி உத்தரவாதம் அல்லாத காப்புறுதி நிறுவனங்கள்) பிரிவில், செலிங்கோ லைஃப்பின் திரு. ஏ.எஸ். ஹெட்டியாராச்சி உயர் விருதை வென்றார், மேலும் அனைத்து துறை மட்டங்களிலும் தனது பிரிவிற்கான தேசிய விருது வென்றவராகவும் முடிசூட்டப்பட்டார். அவரது சக ஊழியர்களான திரு. ஏ. ஐ. பி. மஞ்சுள மற்றும் திரு. வை. எல். ஏ. எம். சி. யகண்டாவல ஆகியோர் முறையே இரண்டாம் இடத்தையும் மூன்றாம் இடத்தையும் வென்றனர், மேலும் தேசிய விருதுப் பிரிவிலும் இதேபோல் அங்கீகரிக்கப்பட்டனர், இது நிறுவனத்தின் ஒவ்வொரு மட்டத்திலுமான வலிமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
விற்பனை மேற்பார்வையாளர் (வங்கி உத்தரவாதம் அல்லாத காப்புறுதி நிறுவனங்கள்) பிரிவில், திரு. ஆர். பி. எதிரிசிங்க வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் அவரது பிரிவிற்கான தேசிய விருது வென்றவராகவும் அவர் திகழ்ந்தார்.
நிறுவனமானது கிளைத் தலைவர் (வங்கி உத்தரவாதம் அல்லாத காப்புறுதி) பிரிவிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியது, இதற்கிணங்க திரு. எஸ். தர்ஷன் வெற்றியாளராகதேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தேசிய விருதையும் பெற்றார், அதே வேளை திரு. ஆர். பி. எல். தம்மிக்க இரண்டாவது இடத்தைப் பெற்றதுடன் மற்றும் தேசிய விருது பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
இவ்விருதுகள் நிகழ்வில் செலிங்கோ லைஃப்பின் வளர்ந்து வரும் திறமையும் அங்கீகரிக்கப்பட்டதுடன் விரைவான தொடக்கப் பிரிவினர் விருதுகள்’ பிரிவில் திருமதி பி. வானதி மற்றும் திருமதி எஸ். காஞ்சனா முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றனர்.
இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் செலிங்கோ லைஃப் நிறுவனமானது தொடர்ந்து 21 ஆண்டுகளாக சந்தைத் தலைமைத்துவத்தை வகித்து வருவதுடன் காப்புறுதிதாரர்களின் லட்சியங்களைப் பாதுகாக்கும் மற்றும் ஆபத்தை நீக்கும் புதுமையான காப்புறுதித் தீர்வுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிராண்ட் ஃபினான்ஸினால் இந்த நிறுவனமானது இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தகநாமமாகவும், ஒட்டுமொத்தமாக 22 வது மிகவும் மதிப்புமிக்க வர்த்தகநாமமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டது. 2025 ஆம் ஆண்டில் தொடர்ந்து 19 வது ஆண்டாக மக்களின் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக வாக்களிக்கப்பட்டநிலையில் மில்லியன் கணக்கானவர்களால் நம்பப்படும் வர்த்தகநாமம் என்ற அதன் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியது.
செலிங்கோ நிறுவனமானது 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் சிறந்தவர்த்தகநாமமாக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் மேலும் 2023 ஆம் ஆண்டில் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) மற்றும் பட்டய முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனம் (CIMA) ஆகியவற்றால் இலங்கையில் மிகவும் போற்றப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.