வணிகம்

உலக HRD மாநாட்டு இலங்கை விருதுகள் நிகழ்வில் சியெட் களனி இரட்டை வெற்றியைப் பதிவு செய்தது

சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனமானது (CEAT Kelani Holdings) இலங்கையின் 2025 ஆம் ஆண்டுக்கான “Employer Brand of the Year” (ஆண்டின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தகநாமம்) விருதை வென்றுள்ளது. மேலும், அதன் மனிதவள துணைத் தலைவர் திரு. துஷார ஹெட்டிதந்திரிகே அவர்கள் இலங்கையின் சிறந்த மனிதவளத் தலைவர் (Topmost HR Leader of Sri Lanka) என்ற விருதைப் பெற்றுள்ளார். இவ்விருதுகள் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற 2025 உலக மனிதவள அபிவிருத்தி மாநாட்டு இலங்கை விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்பட்டன. 

இலங்கை விருதுகளுக்கான மதிப்பீட்டு செயல்முறையானது, வர்த்தகநாம யுக்தி ,ஊழியர் பெறுமதி முன்மொழிவு, ஆட்சேர்ப்பு மற்றும் நிலைபேறு, பல்வகைமை மற்றும் இணைப்பு, தொழில் வழங்குநரின் அங்கீகாரம், புத்தாக்கம், படைப்பாற்றல் மற்றும் பெறுபேறுகள் போன்ற அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டது. 

இந்த அண்மைய விருதுகள், சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனமானது அதன் வர்த்தக மற்றும் மனிதவள (HR) யுக்திகளைக் கொண்டிணைத்து, உண்மையான மகிழ்ச்சியான ஊழியர்களை உருவாக்கவும், பகிர்ந்து கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்த பண்பாட்டை நிலைநிறுத்தவும் எடுத்துக்கொண்டுள்ள உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துகின்றன. 1,000-க்கும் அதிகமான ஊழியர்களின் வலிமையுடன் – அதில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய 150-க்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில் அந்த நிறுவனம், ஊழியர்கள் ஈடுபாடு, நிலைத்திருத்தம் மற்றும் மொத்த பணியிட நலனில் தொடர்ந்து முன்னுதாரணங்களை அமைத்துள்ளது. 

திறந்த வெளிப்படையான செயல்திறன் முகாமைத்துவ முறைகள், திறமை மேம்பாட்டு முயற்சிகள், வாரிசுரிமை திட்டமிடல், தொழில் அபிவிருத்தி நிகழ்வுகள் மற்றும் தனது தொழிற்சங்கத்துடன் கொண்டுள்ள ஆரோக்கியமான கூட்டாண்மை ஆகியவை சியெட் நிறுவனத்தின் ஊழியர் பெறுமதி முன்மொழிவின் (Employee Value Proposition) அங்கீகரிக்கப்பட்ட அசையாச் சுவடுகள் ஆகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 

நாம் தொழில் மற்றும் வாழ்வு சமநிலைக்கும், ஊழியர் நலன்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம். இதற்காக குடும்பங்களையும் உள்ளடக்கும் பல்வேறு நிகழ்வுகளை நடத்துகிறோம். மேலும், உள்ளக ஆட்சேர்ப்பு, தொழில் ஊக்குவிப்பு, பணியிட மாற்றம், தொழில்முறை வளர்ச்சி திட்டமிடல் ஆகியவற்றை வலியுறுத்தும் மனிதவளக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறோம். தொழில்முறை தகுதிகளுக்கான சிறப்பு கடன் திட்டங்களையும் வழங்குகிறோம், என சியெட் களனி நிறுவனத்தின்பிரதம செயற்பாட்டு அதிகாரியும் முகாமைத்துவப்பணிப்பாளருமான திரு. ரவி டட்லானி தெரிவித்தார். அத்துடன், எமது வலுவான அங்கீகாரம் மற்றும் பரிசளிப்பு கொள்கையின் மூலம்புத்தாக்கம் சார்ந்த சிறப்பான பெறுமதியை வழங்கும் ஊழியர்களைப் பாராட்டுகிறோம்.

What's your reaction?

Related Posts

ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனியுடன் கைகோர்த்து அமெரிக்க உறக்கம்சார் தீர்வுகள் வழங்குனரான Englander இலங்கையில் பிரவேசம்

இலங்கையின் மாபெரும் மற்றும் பரந்தளவு பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற மெத்தை தொழினுட்ப நிறுவனமான Englander International உடன் இணைந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற மெத்தைகளை…