இலங்கை

லண்டன் வாழ் யாழ்ப்பாண மாப்பிள்ளையை விவாகரத்து செய்யும் யுவதி; காரணத்தால் அதிர்ச்சி!

 லண்டன் மாப்பிள்ளையிடம் விவாகரத்து கேட்டு யாழ்ப்பாண யுவதி கணவனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரியவருகின்றது.

யாழில் 31 வயதான குடும்பப் பெண் ஒருவர் தனது கணவன் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை அறிந்து விவாகரத்துக்கு செய்ய கணவனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரியவருகின்றது.

நீண்ட காலம் லண்டனில் வசித்து வந்த 40 வயதான யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட ஒருவர் மீண்டும் யாழ் வந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதன்போது அவருக்கு யாழில் திருமணம் நடைபெற்றுள்ளது. எனினும் மனைவியுடன் தங்காத கணவர் கொடிகாமம் பகுதியில் உள்ள அவருக்குச் சொந்தமான பண்ணையில் தங்கியிருந்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகின்றது.

16, 17 வயதான சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதுடன் அந்த காட்சிகளை தனது தொலைபேசியிலும் பதிவு செய்து வைத்திருந்தாகவும் , அது தொடர்பில் வினவிய மனைவியை கணவர் தாக்கியதாகவும் தெரியவருகின்றது.

இதனையடுத்து லண்டன் கணவனை விவாகரத்து செய்ய மனைவி நோட்டீஸ் அனுப்பியதாகவும் எனினும் கணவர் மீண்டும் லண்டன் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து அவரது லண்டன் முகவரிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…