இலங்கை

இந்திய பிரதமரை சந்தித்த பிரதமர் ஹரினி!

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

இலங்கை பிரதமரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக இந்திய பிரதமர் தனது X இல் பதிவிட்டுள்ளார்.

கல்வி, பெண்கள் அதிகாரமளித்தல், புதுமை, மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் மீனவர் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக இந்திய பிரதமரின் X பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெருங்கிய அண்டை நாடுகளாக, இரு நாட்டு மக்களின் செழிப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு இரு நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என இந்திய பிரதமர் மேலும் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…