இலங்கை

ஃபேஸ்புக் விருந்துபசாரம் சுற்றிவளைப்பு – 10 பேர் கைது

ஃபேஸ்புக் விருந்துபசாரம் சுற்றிவளைப்பு - 10 பேர் கைது

பாணந்துறை, கொரக்கான பிரதேசத்தில் வீடொன்றில் நடத்தப்பட்ட ‘ஃபேஸ்புக் விருந்துபசாரம் சுற்றி வளைக்கப்பட்டு, அதன் உரிமையாளர், அவரது மனைவி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை, பொரலஸ்கமுவ, காலி, பசறை மற்றும் பதுளைப் பகுதிகளை சேர்ந்த 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்டவர்களில் சந்தேகநபர்களுக்கு போதைப்பொருளை வழங்கிய நபரும் அடங்குவதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர். 

சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் போது போதைப்பொருளைப் பயன்படுத்தியிருந்தனர் என்பதுடன், அவர்களிடம் சிறிய அளவில் கொக்கெய்ன் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். 

பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…