இலங்கை

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, அதாவது வரவு செலவுத் திட்ட உரை, நாளை (07) இடம்பெற உள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாளை மாலை ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பைச் சமர்ப்பிக்க உள்ளார். அதன்படி, வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 6 நாட்கள் இடம்பெறவுள்ளது. இரண்டாவது வாசிப்பின் வாக்கெடுப்பு 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது. குழு நிலை விவாதம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 நாட்கள் நடத்தப்படவுள்ளது. மூன்றாவது வாசிப்பின் வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…