இலங்கை

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அறிவித்தல்

மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய கரிசல் கிராமத்தில் புதிய நீர் இணைப்புகளை வழங்குவதற்கான விசேட முகாம் நாளை (21) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இம்முகாம் பெரிய கரிசல் பள்ளிவாசலில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது. 

வழக்கமாக புதிய நீர் இணைப்பைப் பெற்றுக்கொள்வதற்கு அலுவலகத்திற்கு பலமுறை செல்லவேண்டியிருப்பதோடு, விண்ணப்பித்தல், கள ஆய்வு மற்றும் மதிப்பீட்டுத் தொகையைச் செலுத்துதல் போன்ற நடைமுறைகளுக்கு அதிக நாட்களும் தேவைப்படுகின்றன. 

பொதுமக்களின் இத்தகைய சிரமங்களைக் குறைக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும், விண்ணப்பம் கோருதல் முதல் கட்டணம் செலுத்துதல் வரையிலான அனைத்து சேவைகளையும் ஒரே நாளில், ஒரே இடத்தில் வழங்கும் நோக்கில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தேவையற்ற அலைச்சல்கள் இன்றி புதிய நீர் இணைப்புக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…