இலங்கை

யாழில் இன்று முதல் புதிய பேருந்து சேவை

சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் பிரதேச மக்களின் நலனை கருத்திற்கொண்டு 782 வழித்தட பேருந்து சேவையில் புதிய இணைப்பு செய்யப்பட்டுள்ளது. 

கொழும்பு – காரைநகர் இடையே போக்குவரத்தில் ஈடுபடும் அரச பேருந்து கொழும்பில் இருந்து வந்து அதிகாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு சென்று அங்குள்ள பயணிகளை ஏற்றியவாறு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு வரும். 

பின்னர் அங்கிருந்து 5.50 மணிக்கு வழமை போல் காரைநகர் நோக்கி போக்குவரத்து சேவையில் ஈடுபடும். 

அதுபோல பி.ப 6.20 மணிக்கு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு சென்று அங்குள்ள பயணிகளை ஏற்றியவாறு காரைநகர் நோக்கி போக்குவரத்து சேவையில் ஈடுபடும் என காரைநகர் அரச போக்குவரத்து சாலை முகாமையாளர் தெரிவித்துள்ளார். 

இந்த சேவையானது இன்று முதல (24) இலங்கை போக்குவரத்து சபையினால் ஆரம்பிக்கப்படவுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…