இலங்கை

மண்சரிவு அபாயம் உள்ள மத்திய மாகாண பாடசாலைகள் ஆராய்வு

டித்வா புயலினால் ஏற்பட்ட மண்சரிவு அபாயத்திற்குள்ளான மத்திய மாகாணப் பாடசாலைகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆரம்பித்துள்ளது. 

அதன்படி, பல்கலைக்கழகங்களின் உதவியுடன் பாடசாலை வளாகங்களில் மண்சரிவு அபாயப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலை வளாகங்களின் நிலைமையை உடனடியாக மதிப்பிடும் பணி தற்போது நடைபெறுகிறது. 

இந்தச் சோதனைகள் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், பேராதனை, மொரட்டுவ மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் நிபுணர்கள் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளைக் கொண்ட 15 விசேட நிபுணர் குழுக்கள் இணைந்து குறித்த பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…