இலங்கை

பிள்ளைகளின் கண் முன்னால் தாயார் கொலை!

அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர், தன் பிள்ளைகளின் கண் முன்னால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (4) இடம்பெற்றுள்ளது.

மாலை 5 மணியளவில் கத்தியுடன் வீட்டுக்கு வந்த உறவினரான ஆண் ஒருவர், வட்டிப் பணம் தொடர்பில் அந்தப் பெண்ணுடன் முரண்பட்டுள்ளார்.

இறுதியில் அவர் தான் கொண்டு வந்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணின் நெஞ்சில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையாளியான 42 வயது நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பெண்ணின் கொலை அரங்கேறிய போது வேலை நிமித்தம் வெளியில் சென்றிருந்த கணவரிடமும், பிள்ளைகளிடமும் வாக்குமூலங்களைப் பெற்று மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…