இலங்கை

வடக்கு கடலில் 7 இந்திய மீனவர்கள் கைது; 2 படகுகள் பறிமுதல்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடிப் படகுகளுடன் 7 இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – கோவிலன் பகுதிக்கு அப்பால் உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நேற்று (20) இரவு வேளையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…