இலங்கை

சுதந்திரக் கட்சி மீண்டெழும்: எனக்கு ஜனாதிபதி பதவி கனவு இல்லை – நிமல் சிறிபாலடி சில்வா

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணத்தை ஆராயும்போது, ஆட்சி கவிழ்ப்பு பணியை எதிரணி செய்யவேண்டியதில்லை. அவர்களாகவே தம்மை கவிழ்த்துக்கொள்வார்கள் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அரசியல் களத்தில்போன்று வேறு எங்கும் பாரிய சவால்கள் கிடையாது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டும் அல்ல, அனைத்து கட்சிகளுக்குள்ளும் இன்று உள்ளக மோதல் உள்ளது. ஆளுங்கட்சிகூட பிளவுபட்டுதானே உள்ளது.

எனவே, யதார்த்த அரசியலை புரிந்துகொண்டு கட்சியை நாம் கட்டியெழுப்ப வேண்டும். முன்னோக்கி செல்வது பற்றி ஆராய வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியுமா என்ற கேள்வியை சிலர் எழுப்பலாம். நிச்சயம் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி என்ற நிலைக்கு கட்சியை கொண்டுவரலாம்.

எனது அரசியல் வாழ்வில் நான் என்றும் அவசரப்பட்டதில்லை. படிப்படியாகவே வளர்ந்துவந்தேன். எனவே, கட்சியை விட்டு சென்ற அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.

சிலர் பதவி கேட்கின்றனர். முதலில் கட்சிக்குள் வந்து பிறகு இலக்கை அடைய வேண்டும். எனக்கு ஜனாதிபதியாக வேண்டும் என்ற கனவு இல்லை.” – என்றார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…