இலங்கை

 தமிழர்களின் கரிநாள் –  கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி 

இலங்கையின் 78 ஆவது சுதந்திரநாளை தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி இன்று கிளிநொச்சியில்  கவனயீர்ப்பு பேரணி  இடம்பெற்றது.

இந்த பேரணி கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்து, பசுமைப்பூங்கா வரையில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ் அரசியல் பிரமுகர்களின் பங்கற்புடன் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் படுகொலை மற்றும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியறாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தமிழ் இனப்பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத்தருமாறும் தமிழர் தாயகப்பரப்பில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துமாறும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இந்த பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சிவில் சமூகசெயற்பாட்டாளர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…