இலங்கை

விவசாயிகளுக்கு பிரதி அமைச்சர் வழங்கிய உறுதி

அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்துள்ளார். 

இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தற்போது பல மாவட்டங்களில் நெல் களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அறுவடை கிடைக்கப்பெறும் அளவைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அத்துடன், கடந்த போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் இருப்புகளை முறையாக அரிசியாக மாற்றி சந்தைக்கு விடுவிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். 

“இன்று பல மாவட்டங்களில் நெல் களஞ்சியசாலைகளைத் திறந்து, அறுவடை வரும் அளவைக் கண்காணித்து நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதேபோல் கடந்த காலங்களில் கொள்வனவு செய்த நெல்லை அரிசியாக மாற்றி சந்தைக்கு வெளியிடும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம். நெல் கொள்வனவு செயல்முறைகளை நாங்கள் தொடங்கியுள்ளோம், களஞ்சிய வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன, எனவே வருங்காலத்தில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது.”

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…